பீகார் அடுத்த முதல்வர் யார்? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:36 IST)
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகாரில் 57.05% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்
 
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் தேவை. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பு என கூறப்பட்டது. இந்த கணிப்புகள் உண்மையா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும். 
 
பீகார் மட்டுமின்றி மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் நடைபெற்ற 28 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று தெரியும். இம்மாநிலத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும் என்பதும், அதேபோல் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளில் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

அடுத்த கட்டுரையில்
Show comments