Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு..!! முதலமைச்சர் கணிப்பு

Advertiesment
Election Commission
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (12:00 IST)
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கனித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அளவு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்  
 
இந்த நிலையில் பீகாரில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்  ’நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம் என்றும் எதிர் கட்சிகளின் ஒற்றுமை காரணமாக அதிக இடங்களில் தோல்வி ஏற்படும் என்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
பாஜகவை தோற்கடிக்க அனைத்து எதிர்கட்சிகளும் அணி திரள வேண்டும் என்றும்  தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல்.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் கோரிக்கை..!