பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று, 65 பயணிகளுடன் சிதாமார்கி நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில், அப்பேருந்து, பாசிதா கிராமம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. 25 அடி ஆழம் கொண்ட அக்குளத்தில் பேருந்து விழுந்ததால், பேருந்து முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதை அடுத்து, இது குறித்து தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு தாமதமாக வந்த மீட்பு குழுவினர் மீது கிராம மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.