Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுரோட்டில் பிக்பாஸ் நடிகைக்கு விழுந்த அடி உதை: பெரும் பரபரப்பு

Advertiesment
நடுரோட்டில் பிக்பாஸ் நடிகைக்கு விழுந்த அடி உதை: பெரும் பரபரப்பு
, ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (20:14 IST)
பிரபல தொலைக்காட்சி நடிகையும், இந்தி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவருமான நடிகை ரூபாலி கங்குலி என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் நடுரோட்டில் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடிகை ரூபாலி மும்பையில் தனது காரில் ஐந்து வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது அவருடைய கார் லேசாக மோதிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் நடுரோட்டில் ரூபாலியின் காரை நிறுத்தி கார் கண்ணாடியை உடைத்து அவரையும் தாக்கினர். இதில் ரூபாலிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
 
webdunia
ரத்த காயத்துடன் காவல்நிலையம் சென்ற ரூபாலி, மோட்டார் சைக்கிள் நபர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து தலைமறைவாகியிருந்த இரண்டு இளைஞர்களை ஒருசில மணி நேரத்தில் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் விஜயகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்