Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் டிச.12 பதவியேற்பு!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (14:11 IST)
குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என பாஜக அறிவிப்பு.


குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதால் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி உறுதியானதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்துள்ளார். மேலும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments