Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்வே வராத கோரிக்கை... கடந்த ஆண்டு இதே தேதியிலும் ஸ்ரைக்!!

தீர்வே வராத கோரிக்கை... கடந்த ஆண்டு இதே தேதியிலும் ஸ்ரைக்!!
, புதன், 8 ஜனவரி 2020 (17:14 IST)
கடந்த ஆண்டும் இதே தேதியில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
விலைவாசியை மனதில் கொண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 6,00வழங்க வழி வேண்டும், அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.  
 
இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க தொழில்துறை அமைச்சர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.  
 
இதேபோல தான் கடந்த ஆண்டும் இதே தேதியில் இந்த வேலைநிறுத்த போராட்டம் இதே கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றது. கடந்து இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் இந்த ஆண்டு ஒரு தினமாக உள்ளது. இதைதவிர்த்து ஆண்டுகளாய் தொடரும் வேலைநிறுத்தத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 
 
இதற்கிடையே இன்று பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் தரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்; மூன்று பேர் கைது