Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

70 ஆண்டுகளாக கோவிலை காக்கும் முதலை! முதன்முறையாக தரிசனம்!

70 ஆண்டுகளாக கோவிலை காக்கும் முதலை! முதன்முறையாக தரிசனம்!
, வியாழன், 22 அக்டோபர் 2020 (18:04 IST)
கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் வாழ்ந்து வரும் முதலை முதன்முறையாக சாமியை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறது பபியா என்ற முதலை. பத்மநாபசுவாமி கோவிலின் காவலனாக கருதப்படும் இந்த முதலை இதுநாள் வரையிலும் அசைவம் சாப்பிட்டதில்லை என்று சொன்னால் பலர் வியப்பின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். குளத்தில் இருக்கும் மீன்களை கூட சாப்பிடாத இந்த முதலை குளத்திற்கு வரும் பக்தர்களையும் தாக்கியது கிடையாது.

பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் வழங்கும் நெய், பழங்கள் கலந்த உணவுதான் பபியாவுக்கு சாப்பாடு. கடந்த 70 ஆண்டுகாலமாக கோவில் குளத்தில் வாழ்ந்து வரும் பபியா இதுவரை ஒருதடவை கூட கோவில் சந்நிதி பக்கம் வந்ததில்லையாம். இந்நிலையில் திடீரென சந்நிதி பக்கம் கரையேறி வந்த பபியா சில நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் குளத்திற்கு சென்று விட்டதாக அங்கு பணிபுரியும் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். இது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மருது சித்தர்களுக்கு நினைவாலயம் ... ‘’ நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அடித்து கோரிக்கை