Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் நடந்த சேவல் சண்டை.. வேடிக்கை பார்த்த சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு..!

Advertiesment
cock fight

Siva

, வியாழன், 16 ஜனவரி 2025 (12:28 IST)
ஆந்திராவில் உள்ள சில பகுதிகளில் நேற்று சேவல் சண்டை நடந்த நிலையில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்ததாகவும் இதில் வேடிக்கை பார்த்த சேவல் ஒன்று ரூ.1.25 கோடி பரிசு பெற்றதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களில் பல கிராமங்களில் சேவல் சண்டை நடைபெறுகிறது. சேவல் சண்டை சூதாட்டமாக கருதப்படுவதால் போலீசார் அதற்கு தடை விதித்துள்ளனர். இருப்பினும் உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவால் இந்த சேவல் சண்டை நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 5 சேவல்கள் ஒரே வளையத்திற்குள் சண்டை போட களம் இறக்கப்பட்ட நிலையில் இதில் நான்கு சேவல்கள் தங்களுக்குள் சண்டை போட்டு ஒரு கட்டத்தில் மயக்கம் ஆகிவிட்டன. ஆனால் இந்த நான்கு சேவல்களையும் கண்டு கொள்ளாமல், கடைசி வரை களத்தில் நின்ற வேடிக்கை பார்த்த சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேவலின் உரிமையாளருக்கு 1.25 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்டாக் செயலி தடை நிறுத்தி வைக்கப்படுகிறதா? டிரம்ப் அதிரடி முடிவு..!