Webdunia - Bharat's app for daily news and videos

Install App

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (09:42 IST)
பெங்களூரில் ஒரு இளம் பெண், வெறும் 180 மீட்டர் மட்டும் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்தது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஓலா டிரைவர் அந்த பெண்ணிடம் கேட்ட காரணத்தை அறிந்ததும், அது மேலும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இருந்தது.
 
பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஓலா பைக் புக் செய்திருந்தார். அவர் புக் செய்த பைக் வந்ததும், டிரைவர் OTP-யைக் கேட்டார். பின்னர், அவர் செல்ல வேண்டிய தூரம் வெறும் 180 மீட்டர் மட்டுமே இருப்பதை டிரைவர் கவனித்தார்.
 
இதனைத் தொடர்ந்து, டிரைவர், "நீங்கள் சரியான இடத்தைக் தான் தேர்வு செய்துள்ளீர்களா?" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், ஆம், சரியான இடத்திற்குத் தான் செல்ல வேண்டும்" என்று உறுதியாக பதிலளித்தார்.
 
அப்போது டிரைவர், "இவ்வளவு அருகில் இருக்கும் இடத்திற்கும் ஏன் ஓலா பைக்?" என்று கேட்க, அந்த பெண் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "இந்த தெருவில்  நாய்கள் தொந்தரவு அதிகம். நாய்கள் என்றாலே எனக்கு பயம். அதனால் தான் ஓலா பைக் புக் செய்தேன்," என்று அவர் கூறினார்.
 
இதைக் கேட்ட ஓட்டுநருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் வேறு ஒன்றும் கூறாமல், அந்த பெண்ணை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி, ரூ.19 மட்டும் கட்டணமாக பெற்றுக் கொண்டார்.
 
இது குறித்து ஓட்டுநர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். "நாய் கடித்து இன்ஜெக்ஷன் போடுவதைவிட ரூ.19 செலவழிப்பது புத்திசாலித்தனம்தான்," போன்ற காமெடியான கமெண்ட்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments