Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிச்சை எடுப்பதுபோல் நடித்து அரசியல் கட்சி நிர்வாகியை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!

Advertiesment
murder1a
, வியாழன், 17 நவம்பர் 2022 (16:52 IST)
பிச்சை எடுப்பதுபோல் நடித்து அரசியல் கட்சி நிர்வாகியை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!
பிச்சை எடுப்பது போல் நடித்து பிரபல அரசியல் கட்சி தலைவரை கொலை செய்ய நடந்த முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா என்ற பகுதியில் மர்ம நபர் ஒருவர் பிச்சை எடுப்பது போல் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி சேஷகிரி ராவ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தார்
 
பிச்சை கேட்டு வந்த நபருக்கு தெலுங்கானா கட்சி நிர்வாகி சேஷகிரி ராவ் உணவு வழங்க முயன்ற போது திருவோட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென அவரை சரமாரியாக மர்மநபர் வெட்டினார் 
 
அதன்பின் அவர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சேஷகிரி ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சேஷகிரி ராவை வெட்டி விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேபாள தேர்தலின் பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு!