Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 நாள் ஸ்ரைக்; 2 நாள் லீவ்: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது?

2 நாள் ஸ்ரைக்; 2 நாள் லீவ்: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது?
, புதன், 15 டிசம்பர் 2021 (11:02 IST)
திட்டமிட்டபடி வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 
சமீப காலமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. அந்த அவ்கையில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குகிறது. இதற்கான வங்கிகள் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 
 
இதனால் திட்டமிட்டபடி வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
இரண்டு நாட்கள் வேலை நிறுத்ததிற்கு பின்னர் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்! – கல்லூரி இயக்ககம் உத்தரவு!