Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

Siva
திங்கள், 31 மார்ச் 2025 (09:38 IST)
இன்று அதாவது மார்ச் 31ஆம் தேதி, ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
ஒவ்வொரு நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை இருக்கும் நிலையில் 2024-25ம் நிதியாண்டிற்கான முடிவுகளை அரசு மார்ச் 31க்குள் நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதனால், வங்கிகள் இன்று வழக்கமான நேரத்தில் செயல்பட வேண்டும் என்று ஆர்பிஐ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், அனைத்து வங்கிகளும், அரசின் வருமான, செலவு கணக்குகளை நிர்வகிக்கும் கிளைகளும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம்போல் இயங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு பரிவர்த்தனைகளுக்காக கவுன்டர்கள் திறந்திருக்கும் என்றும், அந்த நாளில் பதிவான காசோலைகள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
2024-25 நிதியாண்டுக்கான அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் சரியாக கணக்கிட, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்காக CTS முறையில் சிறப்பு தீர்வு மேற்கொள்ளப்படும். அரசுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை அந்த நாளில் செலுத்தலாம். எனினும், பொதுவான வங்கி சேவைகள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments