Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிகளில் இன்று முதல் ஆட்டோ டெபிட் முறை ரத்தாகிறதா?

Advertiesment
வங்கிகளில் இன்று முதல் ஆட்டோ டெபிட் முறை ரத்தாகிறதா?
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:35 IST)
ஒரு சேவையை பெறுவதற்காக பணம் செலுத்தும்போது அந்த சேவை நமக்கு தொடர்ச்சியாக தேவையென்றால் ஆட்டோ டெபிட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி கொள்வதால் ஒவ்வொரு மாதமும் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து அந்த நிறுவனம் தங்களுடைய சேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் இடைவிடாத சேவை பொதுமக்களுக்கு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த சேவையில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்பட்டது. ஆட்டோ டெபிட் சேவை தேவை இல்லாதவர்களுக்கும் அந்த சேவை குறித்த ஆப்ஷனை வலுக்கட்டாயமாக பதிவு செய்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து மாதம் மாதம் பணம் எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன
 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் ஆட்டோ டெபிட் செய்ய ரத்து செய்யப்படுவதாகவும் வங்கிகள் அதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது.
 
ஆனால் இந்த சேவையை உடனடியாக நிறுத்த முடியாது என்றும் கால அவகாசம் தேவை என்றும் வங்கிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து செப்டம்பர் 31-ஆம் தேதி வரை ஆட்டோ டெபிட் சேவையை நிறுத்திக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது 
 
ஆட்டோ டெபிட் சேவை தேவை என்றால் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அவருடைய அனுமதியை பெற வேண்டும் என்றும் 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சேவை என்றால் ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பி வாடிக்கையாளரின் அனுமதியை பெற்று ஆட்டோ டெபிட் மூலம் பணத்தை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் தந்தை ஒரு போராளி: கமலுடன் பிரச்சாரத்திற்கு சென்ற அக்சரா டுவீட்