Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கிக் கணக்குகள் முடக்கம் !

வங்கிக் கணக்குகள் முடக்கம் !
, திங்கள், 5 ஜூலை 2021 (16:54 IST)
தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில்  ஏடிஎம் இயந்திரத்தில்  கடந்த மாதம் 17 ஆம் தேதியில் இருந்து 19 ஆம் தேதிக்குள  நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமீர் மற்றும் வீரேந்தர் , நசீர்ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையின்போது, தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ரூபாய் 1 லட்சம் தருவதாக அமீர் அர்ஷ் கூறியதாக வீரேந்தர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மேலும்ஏ.டி.எம்.-களில் பணம் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்ல பைக் ஓட்ட உதவியதாக வீரேந்தர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இயந்திரங்களை கொள்ளையடித்த கும்பலின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கொள்ளை கும்பல் தலைவன் சௌகத் அலியை  சென்னை அழைத்து வந்தனர்.  இவர் ஏற்கனவே மத்திரபிரதேசம், புதுச்சேரி, உத்தரபிரதேசத்தில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது 

இந்நிலையில்,  வங்கி ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சென்னை போலீஸார் 30 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளனர்.

மேலும் ஏடிஎம் கொள்ளையில் வெளி மாநில போலீஸாருக்கு உதவ தயாராக உள்ளதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 போடாமல் லைசென்ஸ் தமிழத்தில் உண்டா? அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!