Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆடையை கிழிக்கபோகிறேன்” என இளம்பெண்ணை மிரட்டிய டாக்ஸி டிரைவர்..

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:36 IST)
பெங்களூருவில் கால் டாக்ஸி டிரைவர் ஒரு இளம்பெண்ணை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில், தனது தோழிகளை பார்க்கச் சென்ற ஒரு இளம்பெண், வீடு திரும்புவதற்கு கால் டாக்ஸி ஒன்றினை புக் செய்துள்ளார். பின்பு சிறிது நேரத்தில் டாக்ஸி வந்ததும் அதில் ஏறி ஒட்கார்ந்து கொண்டார்.

அப்போது யாரிடமோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த டிரைவர், அந்த பெண்ணை குறிப்பிட்டு, மோசமான பெண் என அந்த தொலைப்பேசியில் பேசியுள்ளார். இதனைக் கேட்ட அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதன் பிறகு டாக்ஸி டிரைவர், தான் பேசிக்கொண்டிருந்த செல்ஃபோனை துண்டித்து, அந்த பெண்ணிடம், இனி இவ்வாறு தண்ணி அடித்துவிட்டு வண்டியில் ஏறாதீர்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், உங்க வேலையை பாருங்கள் என்று டிரைவரை கண்டித்துள்ளார். மேலும் அந்த பெண், தனது செல்ஃபோனில் எமெர்ஜென்சி நம்பரை அழைத்துள்ளார். இதன் பிறகு அந்த டிரைவருக்கு வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

பிரச்சினையை குறித்து டிரைவரிடம், சேவை மைய அதிகாரி கேட்டபோது, இந்த பெண் குடித்துவிட்டு வண்டியில் ஏறியுள்ளார் என கூறினார். உடனே அந்த பெண், டிரைவரிடமிருந்த செல்ஃபோனை பிடுங்கி தனக்கு எப்படியாவது உதவுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணை வண்டியை விட்டு உடனே இறங்குமாறு சேவை மைய அதிகாரி கூறியுள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த டாக்ஸி டிரைவர், அந்த பெண்ணை பார்த்து, வண்டியை விட்டு இறங்கு, இல்லையென்றால் உன்னுடைய ஆடையை கிழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண், உடனே டாக்ஸியிலிருந்து இறங்கியுள்ளார். பின்பு பல நேர காத்திருப்பிற்கு பின் தனது நண்பரை வரவழைத்து அந்த பெண் வீடு போய் சேர்ந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments