Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் சாலையில் வெள்ளம்: பெங்களூரில் டிராக்டர்களில் வீடு திரும்பும் ஐடி ஊழியர்கள்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (07:30 IST)
கனமழையால் சாலையில் வெள்ளம்: பெங்களூரில் டிராக்டர்களில் வீடு திரும்பும் ஐடி ஊழியர்கள்!
பெங்களூரில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் விமான நிலையங்களில் கூட மழைநீர் தேங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பெங்களூரில் ஐடி ஊழியர்கள் சாலை வழியாக செல்ல முடியாததால் பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 225 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது இதனை அடுத்து பெங்களூர் ஐடி நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் பெங்களூர் ஐடி நிறுவன ஊழியர்கள் போக்குவரத்துக்கு வழி இல்லாத காரணத்தினால் டிராக்டரில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது 
 
கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் டிராக்டரில் வீடு திரும்பியதாக பல ஐடி ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
டிராக்டரில் ஒரு நபருக்கு 50 ரூபாய் கொடுத்துவிட்டு வீடு திரும்பியதாக ஐடி ஊழியர்கள் பேட்டி அளித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments