Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கனமழை… ரூ.225 கோடி நஷ்டமா??

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:05 IST)
பெங்களூரில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதி இரவுகளில் பெய்த கன மழை, நீர் சரியான வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கி உள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெங்களூரிலும் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாகி உள்ளது. பிரதான சுரங்க பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. விடாமல் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் குட்டி அணை கட்டியது போல சுவற்று துவாரங்கள் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் புல்டோசர்களில் ஏறி நீரோட்டத்தை கடந்து வருகின்றனர். பெங்களூர் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. 
பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியம் மற்றும் கே.ஆர்.புரம் வழித்தடத்திற்கு இடையே உள்ள வெளிவட்டச் சாலையில் (ORR) அரை மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 கிமீ நீளமுள்ள இந்த சாலையில் பல்வேறு சேவைகள் மற்றும் ஒரு மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில், ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதி இரவுகளில் பெய்த கன மழை, நீர் சரியான வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மாயிடம், வெளிவட்ட சாலை நிறுவனங்களின் சங்கங்கள் (ORRCA) கடிதம் சமர்ப்பித்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அம்பேத்கர் பெயரை 1000 தடவை சொல்லணும்..! அமித்ஷாவுக்கு எதிராக திருமா எடுக்கும் நூதன போராட்டம்!

வெளிநாட்டில் சட்டவிரோதமாக சிம்களை விற்ற நபர்.. மடக்கி பிடித்த சைபர் க்ரைம் போலீசார்..!

அல்லு அர்ஜுன் வீட்டில் கல் எரிந்தவர்களுக்கு ஒரே நாளில் ஜாமீன்.. ரசிகர்கள் கொந்தளிப்பு..!

சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments