Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!

Advertiesment
பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி:  யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!
, திங்கள், 18 நவம்பர் 2019 (09:04 IST)
தந்தை பெரியாரை ஒரு அறிவார்ந்த தீவிரவாதி என பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் விமர்சனம் செய்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் பின்பற்றுபவர்களை பற்றி நான் கவலை கொள்கின்றேன். அவர்களை கண்டு அஞ்சுகிறேன். மேலும் பெரியார் அவர்கள் அறிவார்ந்த தீவிரவாதி என்று கூறியுள்ளார். மேலும் ராமர், கிருஷ்ணர் காலம் முதல் முயற்சி உயர் ஜாதியினர் மட்டுமே ஆட்சி செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஆதிதிராவிட மக்களும் இஸ்லாமியர்களும் வந்தனர் என்று கூறிய பாபா ராம்தேவ், பெரியார் மக்களை தவறாக வழி நடத்தியதாகவும் விமர்சனம் செய்தார்
 
webdunia
யோகா குரு பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இதே பேட்டியில் ஓவைசியையும் யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த அவர் முயற்சிப்பதாகவும் அத்தகைய சிந்தனை கொண்ட கும்பலுக்கு ஓவைசி தலைவராக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுக்கு எதிராக திடீரென காய் நகர்த்துகிறாரா திருமாவளவன்?