Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டிற்காக நீ செத்துமடி பொது ஜனமே!: பாபா ராம்தேவின் கிண்டல் பேச்சு!

நாட்டிற்காக நீ செத்துமடி பொது ஜனமே!: பாபா ராம்தேவின் கிண்டல் பேச்சு!

நாட்டிற்காக நீ செத்துமடி பொது ஜனமே!: பாபா ராம்தேவின் கிண்டல் பேச்சு!
, சனி, 19 நவம்பர் 2016 (10:54 IST)
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் கருப்பு பண முதலைகள் அவதிப்படுகிறார்களோ இல்லையோ சாதாரண பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பையெட்டி நாடு முழுவதும் 55 பேர் பலியாகியுள்ளனர்.


 
 
அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். ஆனால் மக்களின் துயரை கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்காமல் இது குறித்த கேள்விக்கு கிண்டலும் கேலியுமாக பதில் கூறியிருக்கிறார் பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் பாபா ராம்தேவ்.
 
500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மாற்று வழியில்லாமல் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாபா ராம்தேவ், போர் சமயத்தில் நம் இராணுவ வீரர்கள் ஏழு நாட்கள், எட்டு நாட்கள் உணவின்றித் தவிக்கின்றனர். நாமும் அதுபோல நம் நாட்டுக்காகச் செய்ய முடியாதா? என கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லமல் பேசியிருக்கிறார்.
 
மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்த வேளையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் தன் மகள் திருமணத்தை பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வண்ணம் நடத்தியுள்ளார்.
 
இதற்கு பதில் அளித்த அவர், பாஜகவில் இருக்கும் பலர் பிரம்மச்சாரிகள். அதனால் இது கல்யாண சீசன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையை பதினைந்து நாட்களோ அல்லது ஒரு மாதமோ கழித்து அமல்படுத்தியிருந்தால், மக்கள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
 
இதனால் ஏற்படும் ஒரே நல்ல விஷயம், மக்கள் வரதட்சணை கேட்க முடியாது என சிரித்துக்கொண்டே கூறினார். இங்கு பல்வேறு சுப காரியங்களை நடத்த முடியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பேத்தியின் கல்யாணத்தை நடத்த முடியாதோ என்ற தவிப்பில் மரணமடைந்த சம்பவம் கூட நடந்திருக்கிறது. ஆனால் மக்கள் படும் துயரில் பாபா ராம்தேவுக்கு கிண்டல் பேச்சும் கேலி பேச்சும் பேச தோன்றுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா புஷ்பா ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்பட வாய்ப்பு!