Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ்

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:53 IST)
உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முக்கிய போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி தேச நலனுக்கு எதிரானது என பாபா ராம்தேவ் அவர்கள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தற்போதுதான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி குறித்து பாபா ராம்தேவ் கூறியபோது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேச நலனுக்கு எதிரானது, ராஷ்டிரிய தர்மத்திற்கு எதிரானது என்றும் பயங்கரவாதத்துடன் ஒருபோதும் நாம் கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்னும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பில் இருந்த நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments