Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு 400 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளோம்: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தகவல்..!

Siva
திங்கள், 17 மார்ச் 2025 (07:54 IST)
அரசுக்கு கடந்த ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை, ராமர் கோயில் அறக்கட்டளை அரசுக்கு 400 கோடி ரூபாய் வரி செலுத்தி உள்ளதாகவும், இதில் ஜிஎஸ்டி 270 கோடியும், மற்ற  வரிகள் 130 கோடியும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,  அயோத்தி அறக்கட்டளையின் நிதி ஆவணங்களை தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலக அதிகாரிகள் தொடர்ந்து தணிக்கை செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

அயோத்திக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் அயோத்தி முக்கிய ஆன்மீக சுற்றுலா மையமாக உருவெடுத்து உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கும்பமேளா நடைபெற்ற போது மட்டும், அயோத்திக்கு 1.26 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டு இதுவரை 5 கோடி பேர் கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவையில்லை: திருமாவளவன்

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments