Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கிலோ எடை கொண்ட ராமர் சிலை..! கிரேன் மூலம் கருவறைக்குள் வைப்பு..!!

Senthil Velan
வியாழன், 18 ஜனவரி 2024 (12:55 IST)
அயோத்தி ராமர் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் வைக்கப்பட்டது.
 
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார். இதைமுன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த விழாவில் பங்கேற்க அரசியல்வாதிகள், ஆன்மீகம், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.! அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை.!!
 
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் வைக்கப்பட்டது. சிலை பிரதிஷ்டை விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
கோவில் வளாகத்தில் சுமார் 8000 பேர் பங்கேற்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments