Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’பரிதாபம்’ – சுதந்திர தின உரையாற்றி சென்ற காவலர் சுட்டுக்கொலை

’பரிதாபம்’ – சுதந்திர தின உரையாற்றி சென்ற காவலர் சுட்டுக்கொலை

’பரிதாபம்’ – சுதந்திர தின உரையாற்றி சென்ற காவலர் சுட்டுக்கொலை
, புதன், 17 ஆகஸ்ட் 2016 (08:55 IST)
பாட்னாவை சேர்ந்த பிரமோத்குமார் (44), கடந்த 1998ம் ஆண்டு துணை ராணுவத்தில் இணைந்து, 2014ம் ஆண்டு ஸ்ரீநகரில், பணியமர்த்தப்பட்டு சமீபத்தில் கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றவர்.


 


இந்நிலையில், 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில், சிஆர்பிஎப் கமாண்டன்ட் பிரமோத் குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”இந்தியா 70வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு படையினருக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்களை நாம் திறமையாக சமாளிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான நாள் ஆகும்.” என்றார். இதை அடுத்து, நவ்ஹட்டா பகுதியில் தீவிரவாதிகள் கண்ணிவெடி புதைப்பதாக சிஆர்பிஎப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததால் உடனடியாக பிரமோத்குமார் தலைமையிலான வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.. அப்போது, கமாண்டன்ட் பிரமோத்குமாரின் கழுத்தில் குண்டுபாய்ந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும், அவர் வீரமரணம் அடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கொடுமை’ - செல்போன் திருடியதற்காக பெண் அடித்து கொலை