Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாய்லெட் கட்ட முடியலையே! உனக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி: நீதிபதி காட்டம்

Advertiesment
மனைவி | டாய்லெட் | கழிப்பறை | Toilet | Shauchalay Nirman | sell wife | open defecation | Ghar Ka Sammaan | District magistrate | Clean India | build Toilet | Bihar | Aurangabad district megistrate courts controversy | Aurangabad | auction wife
, திங்கள், 24 ஜூலை 2017 (05:03 IST)
இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் டாய்லெட் கட்ட வேண்டிய அவசியம் குறித்து மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக டாய்லட் கட்டுவதற்கு அரசு மானியத்துடன் கூடிய நிதியுதவியும் செய்து வருகிறது.



 
 
இந்த நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பீகார் மாநில ஔரங்காபாத் நீதிபதி கன்வான் தனுஜ் என்பவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்  டாய்லெட் கட்டுவதன் அவசியம் குறித்தும் திறந்த வெளியில் மல ஜலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்தும் விளக்கினார்.
 
பின்னர் கடைசியாக அவர் அங்கு கூடியிருந்த மக்களைப் நோக்கி டாய்லெட் கட்ட தேவைப்படும் ரூ.12 ஆயிரத்தை விட தங்கள் மனைவியை தாழ்வாக நினைப்பவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா? என்று கேட்டு கை உயர்த்தச் சொன்னார். ஒரே ஒருவர் மட்டும் கையை உயர்த்த அவரை நோக்கி, 'டாய்லெட் கட்ட முடியலையே, உனக்கெல்லாம் பொண்டாட்டி எதற்கு, அவரை ஏலம் விட்டு அந்த பணத்தில் டாய்லெட் கட்டு' என்று ஆவேசமாக கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்-கவர்னர் சந்திப்பா? அதிர்ச்சியில் தமிழக அரசு