Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய நாள் மறைந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிக்கும் நாள்: மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

Mahendran
புதன், 28 ஆகஸ்ட் 2024 (13:27 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய நாளை அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் மாணவரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி ’கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொள்ளப்பட்ட சகோதரி மருத்துவ மாணவியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், அவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும், இந்தியா முழுவதும் இது போன்ற மனிதாபிமான செயல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் எனது அனுதாபங்கள்’ என்று கூறினார்,.
 
மேலும் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் மாணவப் பிரிவு நிறுவப்பட்ட இந்த நாளை மறைந்த மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிக்கும் நாளாக அறிவிக்கிறேன். இந்த நாளில் அனைவரும் ஊக்கமாகவும்,  உறுதியுடனும் இருங்கள், நலமுடன் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் இருங்கள்’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்