Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் ஆடி காருக்கு பதில் சொல்லிவிட்டு பிரசவத்துக்கு செல்லுங்கள்: மனிதநேயமற்ற பெண் (வீடியோ)

Advertiesment
என் ஆடி காருக்கு பதில் சொல்லிவிட்டு பிரசவத்துக்கு செல்லுங்கள்: மனிதநேயமற்ற பெண் (வீடியோ)
, சனி, 4 பிப்ரவரி 2017 (14:42 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கணவர் தனது மனைவியை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றபோது ஆடி கார் மீது உரசியதால், ஆடி காரில் வந்த பெண் மனித நேயமில்லாமல் தகராறு செய்துள்ளார்.


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்க காரில் சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுக்கொண்டிருந்த போது முன்னாள் சென்ற ஆடி கார் மீது லேசாக உரசி விட்டது. 
 
ஆடி காரில் சென்ற பெண், கார் சாவியை பிடுங்கி கொண்டு தகராறு செய்துள்ளார். கார் என மனைவி பிரசவ வலியோடு இருக்கிறார், அவரை மருத்துவமனையில் சேர்த்திவிட்டு பின் நாம் பேசுவோம் என்று அந்த் ஆண் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் மனித நேயமில்லாமல் முதலில் என் காரில் ஏற்பட்ட கீறலுக்கு பதில் சொல்லிவீட்டு காரை எடு என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து அந்த இடத்தில் மக்கள் கூட்டம் கூடியது. அவர்கள் அந்த பெண்ணிடம் சமரசம் பேசினர். பின்னர் அந்த பெண் கார் சாவியை வீசி விட்டு சென்றார்.
 
நன்றி: Next Level Films

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தினம் 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் ஜாமீன்’: நீதிபதி விநோத உத்தரவு