இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் பாங்க் ஏடிஎம்ல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் பாங்க் ஏடிஎம்ல் பணியாற்றி வந்த பாதுகாப்புக் காவலரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.