ஏடிஎம் சேவைக்கான கட்டணம் மற்றும் டெபிட் கிரெடிட் அட்டைகள் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் சேவைக்கான கட்டணம் உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது
ஆனால் அதற்கு மேல் எடுத்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது 20 ரூபாய் சேவை கட்டணமாக வாடிக்கையாளர்கள் இருந்து வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 21 ரூபாய் ஆக உயர்த்திக்கொள்ள ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது
அதேபோல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது விற்பனையாளருக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் வங்கி கட்டணம் என்று இருந்த நிலையில் அதனை அடுத்த மாதம் முதல் 17 ரூபாயாக உயர்த்தப்படுவதாக வங்கிகள் தெரிவித்துள்ளது