மேற்கு வங்கம் மாநிலத்தில் கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கல்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கட்டிடத்தில் மூன்று முறை தொடர்ந்து குண்டுகள் வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.