Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (09:59 IST)
ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில், ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களாக நடைபெற்ற கும்பமேளாவில் 18,169 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியான 102 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments