Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று: திருப்பதி கோவில் நிர்வாகம் அதிர்ச்சி!

Advertiesment
12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று: திருப்பதி கோவில் நிர்வாகம் அதிர்ச்சி!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (19:28 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும் 
 
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி உள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து பேசிய பிரதமர் சில அறிவுறுத்தல்களை கொடுத்து உள்ளார் என்பதும் அதன்படி மாநில அரசுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து என்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின் படி திருப்பதி கோவிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு