Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை

Advertiesment
பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை
, சனி, 29 அக்டோபர் 2016 (10:51 IST)
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.


 

 
கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் பினாமி பரிவத்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
இதற்கு முன் பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்தது. தற்போது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சட்டத்தில் வழிபாடு தலங்களுக்கு சொந்தமான நேர்மையான சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது