அசாமில் ஃபார்மலின் தடவிய மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்து மீன் இறக்குமதிக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மீன்கள் பிரஸ்ஷாக இருக்க ஃபார்மலின் எனப்படும் வேதிபொருள் கலக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், ரத்தப் புற்றுநோய் என பல உடல் நல பாதிப்புகள் உண்டாகும்.
இதனைக் கண்டுபிடிக்க தமிழகமெங்கும் உணவுத் துறை அதிகாரிகள் மீன் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மீனிற்கு கேரள அரசு தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஆந்திராவிலிருந்து அசாமிற்கு இறக்குமதியாகும் மீன்களில் ஃபார்மலின் ரசாயனம் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அசாம் அரசு 10 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் மீன்களின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. தடையை மீறி மீன்களை இறக்குமதி செய்யும் வியாபாரிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.