Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு ஆண்டில் 171 என்கவுண்ட்டர்கள்!? ‘வேட்டையன்’களுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்!

Advertiesment
Assam Encounters

Prasanth Karthick

, புதன், 23 அக்டோபர் 2024 (12:35 IST)

அசாமில் ஒரே ஆண்டில் 171 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டது குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

இந்தியாவில் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் கைதிகள் ஆங்காங்கே என்கவுண்ட்டர் செய்யப்படும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருகின்றன. அதேசமயம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் என்கவுண்ட்டர் அதிகரிப்பது சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும் செயலாக உள்ளதாக பேசி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் திரைப்படம் என்கவுண்ட்டர் குறித்த பல கேள்விகளை முன்வைத்தது.

 

இந்நிலையில் அசாமில் நடந்த என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மட்டும் 171 என்கவுண்ட்டர் கொலைகள் நடந்துள்ளது. இதுகுறித்து காட்டமான கருத்துகளை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் “ஒரே ஆண்டில் 171 என்கவுண்ட்டர்கள் என்பது எளிதில் கடந்து போக கூடிய விஷயம் அல்ல. காவல்துறை குறிப்பிட்ட சமூகத்தினரை குறி வைக்கின்றனரா? தங்கள் அதிகார வரம்பை மீறுகின்றனரா? என்பதை அசாம் போலீஸ் விளக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வெள்ளம் வந்தால் சேலத்துக்கு ஓடுவார் எடப்பாடி பழனிசாமி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!