Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேசத்தினர் ஊடுருவி வருவது தமிழகத்திற்கு செல்ல தான்: அசாம் முதல்வர் அதிர்ச்சி தகவல்..!

வங்கதேசத்தினர் ஊடுருவி வருவது தமிழகத்திற்கு செல்ல தான்:  அசாம் முதல்வர் அதிர்ச்சி தகவல்..!

Mahendran

, வியாழன், 2 ஜனவரி 2025 (10:54 IST)
தமிழகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக தான் வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வருகின்றனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தினர் பெரும்பாலானோர் ஜவுளித்துறை பணியாளர்கள் என்றும், வங்கதேசத்தில் மோசமான தொழில் காரணமாக தமிழகத்தில் அவர்கள் பணியில் சேருவதற்கு ஊடுருவி வருகின்றனர் என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால் தமிழக ஜவுளித்துறை உரிமையாளர்களும் அவர்களை ஊக்குவித்து வருகின்றனர் என்றும், செய்தியாளர் சந்திப்பின்போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில், வங்கதேசத்தில் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் மோசமான சூழ்நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இதிலிருந்து தேச பக்தி உள்ளவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கதேசத்திலிருந்து அதிக அளவு ஊடுருவி வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசி உள்ளதாகவும், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயிரக்கணக்கான மலர்களால் உருவாக்கப்பட்ட கப்பல், கார்..! மலர் கண்காட்சியை கண்டு ரசித்த முதல்வர்!