Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் புலிக்கும் மாட்டிறைச்சி தரக்கூடாது! – பூங்காவில் பாஜக தலைவர் போராட்டம்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (10:50 IST)
அசாமில் புலிகளுக்கு மாட்டிறைச்சியை உணவாக தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் தலைமையில் சிலர் பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் குவாஹத்தி பகுதியில் விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு புலி, மான், சிங்கம் உள்ளிட்ட பல வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு மாட்டிறைச்சி நாள்தோறும் உணவாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மாநில பாஜக துணை தலைவர் சத்ய ரஞ்சன் போரா தலைமையிலான கூட்டம் ஒன்று பூங்காவின் வாயிலை மறைத்தவாறு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்களை வன விலங்குகளுக்கு உணவாக அளிக்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வேறு இறைச்சியை விலங்குகளுக்கு அளிக்க வேண்டும் என போராட்டம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது ‘வன விலங்குகளுக்கு குறைந்த விலையில் அதிகமான இறைச்சி தேவை. மாட்டிறைச்சி மட்டுமே அவ்வாறு கிடைக்கிறது. மேலும் மாட்டிறைச்சியை விலங்குகளுக்கு வழங்க அரசாங்கத்தில் இருந்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை” என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments