Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலாக வலுவிழந்த அசானியின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

Webdunia
புதன், 11 மே 2022 (10:26 IST)
புயலாக வலுவிழந்துள்ள அசானி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது.
 
கடந்த 8 ஆம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 105 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே காக்கிநாடா மாவட்டத்தில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. காக்கிநாடாவை தொடும் புயல், பின்னர் திசைமாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுவிழந்துள்ள அசானி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments