மீண்டும் நிதித்துறைக்கு திரும்பிய அருண் ஜெட்லி; குடியரசுத் தலைவர் உத்தரவு

வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (13:07 IST)
மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 
மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.
 
இதனால் பியூஸ் கோயலிடம் தற்காலிகமாக நிதித்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வு முடிந்து திரும்பிய அருண் ஜெட்லி மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். 
 
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்றைய பிக்பாஸில் உள்ளே வந்த புதிய பிரபலம் !