Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரஸ் மீட்டில் டிஸ்கோ டான்ஸ்: சர்ச்சையில் சிக்கிய துணை கமிஷ்னர், எம்எல்ஏ!

பிரஸ் மீட்டில் டிஸ்கோ டான்ஸ்: சர்ச்சையில் சிக்கிய துணை கமிஷ்னர், எம்எல்ஏ!

பிரஸ் மீட்டில் டிஸ்கோ டான்ஸ்: சர்ச்சையில் சிக்கிய துணை கமிஷ்னர், எம்எல்ஏ!
, வியாழன், 27 அக்டோபர் 2016 (13:15 IST)
ஹைதராபாத்தில் போலீஸ் துணை கமிஷ்னரும், எம்எல்ஏவும் கலந்து கொண்ட பிரஸ் மீட்டில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை டிஸ்கோ டான்ஸ் ஆடவிட்டு ரசித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.


 
 
மோசடி வழக்கு ஒன்றில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் டிஸ்கோ பாபா என்பவர். இந்த கைது குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு டிசிபி அலுவலகத்தில் வைத்து டிசிபி சத்யநாரயணாவும் எம்எல்ஏ அகமது பாஷா குவாட்ரியும் பதில் அளித்தனர்.
 
அப்போது ஒரு நிருபர் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஸ்கோ பாபாவின் உடை ஏன் ஜிகினா போல மின்னுகிறது என கேட்டார். அவர் மேடை நடனக்காரர் என டிசிபி பதில் அளித்தார். இதனையடுத்து டிஸ்கோ பாபாவை அந்த பிரஸ் மீட்டிலேயே ஆடை வைத்து அவர்கள் ரசித்துள்ளனர்.

 

 
 
துணை கமிஷ்னர் சத்யநாராயணா மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் ஐயம் ஏ டிஸ்கோ டான்சர் என்ற பாடலுக்கு டிஸ்கோ பாபா ஆடும் அந்த வைரல் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் சர்ச்சை ஏற்படவே நிருபர்கள் ஆடச் சொல்லி கேட்டதால் தான் அவர் ஆடினார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித சாம்பல் கொண்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள்