Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வரை கைது செய்யுங்கள்... பா.ஜ.க. தலைவர் ஆவேசம்

Advertiesment
Arrest
, வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:06 IST)
புதுச்சேரியில் அனுமதியின்றி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்திக்கொண்டுள்ள முதல்வர் நாராயணசாமியை கைதுச் செய்யுங்கள் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட  தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
 
இப்போராட்டம் அதிகரித்து வருவதால் பாஜக வும் களத்தில் இறங்கிவுள்ளது. இதுசம்பந்தமாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து புதுச்சேரி காவல் துறை தலைவர் சுந்தரி நந்தாவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அதில் அனுமதியின்றி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் எனவும்..போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ, ராஜபக்சேவுக்கு ஏன் காட்டவில்லை?