Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்யத்தடை..! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:48 IST)
முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக  மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது புகார் எழுந்தது.
 
இதை அடுத்து பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்த யுபிஎஸ்சி, வரும் காலங்களிலும் அவர் தேர்வெழுத தடை விதித்தது. இந்த முறைகேடு தொடர்பாக யுபிஎஸ்சி கொடுத்த புகாரின் பேரில் பூஜா மீது டெல்லி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

ALSO READ: நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முயற்சி..! ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்.! கங்கனா ரனாவத்..!

முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கேத்கரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்திரவிட்டது. மேலும் டெல்லி காவல்துறை, யுபிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments