Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேளிக்கை விடுதியில் வாக்குவாதம்....இளம்பெண் கார் ஏற்றிக் கொலை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (15:17 IST)
ஜெய்ப்பூரில் உமா என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மங்கேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் உமா. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் உள்ள  இரவு நேர கேளிக்கை விடுதிக்கு தன் காதலனுடன் சென்றுள்ளார்.

அப்போது விடுதியை விட்டு வெளியே வத உமாவுக்கும், மற்றொரு தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, உமாவும், அவரது காதலனும் அந்த  தம்பதியிடம் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த தம்பதி தங்கள் காரில் ஏறி செல்லும்போது, உமாவும், அவரது காதலனும் காரை மறித்துள்ளனர்.

அந்த காரை ஓட்டிய மங்கேஷ் காரை வேகமாக இயக்கிய நிலையில், உமா கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். உமாவின் காதலன் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
இதில், உமா சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பலியானார்.

இதையடுத்து உமாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாவை கார் ஏற்றிக் கொண்டு தப்பியோடிய மங்கேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments