Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப்புடன் வந்த மாணவிக்கு மறுப்பு: ஆசிரியர் - பெற்றோர் வாக்குவாதம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:04 IST)
பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே வரும்படி கூறிய ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

 
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எந்தப் பிரிவினரும் எந்தவித போராட்டம் நடத்தக்கூடாது என்றும் அதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிக்கு வந்த சிறுமியரிடம் ஹிஜாப்பை எடுத்துவிட்டு உள்ளே வரும்படி கூறிய ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
 
ஆம், கர்நாடகத்தின் மாண்டியாவில் ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்த சிறுமியை பெற்றோர் அழைத்து வந்தனர். அப்போது பள்ளி வாயிலில் நின்ற ஆசிரியர் ஹிஜாப்பை அகற்றிவிட்டு உள்ளே வரும்படி மாணவியை கேட்டுக்கொண்டனர். 
 
அதை ஏற்க மறுத்த பெற்றோர் முதலில் உள்ளே அனுமதிக்கும்படியும், வகுப்புக்கு சென்ற பின் ஹிஜாப்பை அகற்றிக்கொள்ளலாம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை வீசிய நபர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

ராகுல்காந்திதான் என்னை தள்ளிவிட்டார்.. மண்டை உடைந்த பாஜக எம்.பி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற களேபரம்!

24 வயது இளம்பெண்ணை கடித்து குதறிய சிறுத்தை.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments