இந்த நேரத்துலயும் பப்ளிசிட்டிக்கு அலையிறீங்களே!? - விமானத்துறை அமைச்சர் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Prasanth K
வெள்ளி, 13 ஜூன் 2025 (12:38 IST)

நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை பார்வையிட சென்ற மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கமெண்டில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 (போயிங் 787) விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இந்த கொடூர விபத்தில் 242 பேரில் 241 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

 

இந்த விபத்தை தொடர்ந்து நேற்றே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டவர்கள் சம்பவ இடம் விரைந்து நிலவரத்தை கேட்டறிந்தனர். இந்நிலையில் அதை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மத்திய விமானத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

 

அதில் அவர் நடந்து வருவதும், இடிபாடுகளில் ஆய்வு செய்வதும், அதிகாரிகளிடம் பேசுவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் பின்னணி இசையெல்லாம் அமைத்து அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதை கண்டு கோபமடைந்த நெட்டிசன்கள் சிலர் கமெண்டிலேயே வந்து மத்திய அமைச்சரை கண்டித்துள்ளனர்.

 

மோசமான விபத்திலும் சென்று வீடியோ எடுத்துக் கொண்டு அதற்கு இசையெல்லாம் சேர்த்து வீடியோ வெளியிடுகிறீர்களே, விபத்தை பார்க்க சென்றீர்களா? படம் எடுக்க சென்றீர்களா? என பலவாறாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஒரு அமைச்சராக இதை விட நீங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments