Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் இன்னமும் காஷ்மீரில்தான் பதுங்கி இருக்கிறார்கள்? - என்.ஐ.ஏ எச்சரிக்கை!

Prasanth Karthick
வெள்ளி, 2 மே 2025 (09:07 IST)

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ, தீவிரவாதிகள் இன்னமும் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த காஷ்மீரி மக்கள், சுற்றுலா கைடுகள் உள்ளிட்ட பலரிடமும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது.

 

இதுதவிர பஹல்காம் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்கள் மற்றும் பஹல்காம் வந்து சென்ற பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களிடம் தேவையான விசாரணையை நடத்துவதற்காக அவரவர் வீட்டிற்கே என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 

என்.ஐ.ஏ திரட்டிய தகவல்களின்படி, பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த பயங்கரவாதிகள் ஒரு வாரத்திற்கு முன்பே அந்த பகுதிக்கு வந்து 4 இடங்களில் உளவு பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்னமும் அந்த பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியுள்ளதாக என்.ஐ.ஏ அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதனால் தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

சாப்பாடு மட்டுமல்ல, தங்கத்தையும் டெலிவரி செய்யும் ஸ்விக்கி.. இனி வீட்டில் இருந்தே தங்கம் வாங்கலாம்..!

வான்வழியை திடீரென மூடிய இந்தியா: தென்கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பாகிஸ்தான்..!

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments