டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லிக்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 10 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது
இதனை அடுத்து அவரை கோர்ட் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறினாலும் அது சாத்தியமில்லை என்று தான் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டபோது அவர் ராஜினாமா செய்தது போல் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் டெல்லி அமைச்சர்கள் தெரிவித்திருந்தாலும் இதற்கு டெல்லி கவர்னர் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
சிறையில் இருந்து கொண்டு முதல்வராக ஒருவர் நிர்வாகம் செய்வது சிரமம் என்றும் இந்தியாவில் இதுபோல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்