Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.25 கோடி சொத்து குவித்த ஆந்திர அரசு அதிகாரி : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

ரூ.25 கோடி சொத்து குவித்த ஆந்திர அரசு அதிகாரி : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

ரூ.25 கோடி சொத்து குவித்த ஆந்திர அரசு அதிகாரி : லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:10 IST)
பல கோடி சொத்து சேர்த்துள்ள, ஆந்திர மாநில போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள்.


 

 
ஆந்திர மாநிலத்தில் வசிக்கும் பூர்ண சந்திரராவ்(55) என்பவர், 1981ம் ஆண்டு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின் அவர் குண்டூர், ஓங்கோல், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார். 
 
தனது 34 வருட பணியில், அவர் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. எனவே, இதுபற்றிய விசாரணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கினார்கள். அப்போது, ஐதராபாத், விஜயவாடா, வினுகொண்டா, குண்டூர் உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு 7 அடுக்கு மாடி குடியிருப்புகளும், ஒரு பங்களாவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், குண்டூரில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு அறையில் வெள்ளிப் பாத்திரங்களும், தங்க நகைகளும் குவிந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கணக்கிட்டு பார்த்ததில், 60 கிலோ வெள்ளியும், 1 கிலோ தங்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான சொத்துக்களுக்கான ஆவணங்களும் அந்த அறையில் அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என்று சந்திரராவ் கூறினார். ஆனால், உண்மையான மதிப்பு ரூ.25 கோடி இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 
இதையடுத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடர்களை கட்டி வைத்து உடலுறவு கொண்ட ஓரினச் சேர்க்கை வெறியர்..