மீண்டும் மும்பை தொடர் தாக்குதல்: கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வந்த மெசேஜால் பரபரப்பு

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:25 IST)
மீண்டும் மும்பை தொடர் தாக்குதல்: கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வந்த மெசேஜால் பரபரப்பு
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல் நடந்தது போல் மீண்டும் ஒரு தொடர் தாக்குதல் நடைபெறும் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது
 
தாஜ் ஹோட்டல் பல இடங்களில் நடந்த தாக்குதலில்  175 பேர் பலியாகினர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 தாக்குதலை போல் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் மும்பையில் நடக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் எண்ணில் இருந்து மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் வந்து உள்ளது 
 
இந்த மெசேஜ் குறித்து விசாரணை நடந்து வருவதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. மீண்டும் தாக்குதல் என்ற தகவல் மும்பை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்கள்

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments