Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அன்னா ஹசாரே: மோடியை எதிர்த்து அதிரடி கேள்விகள்!!

மீண்டும் அன்னா ஹசாரே: மோடியை எதிர்த்து அதிரடி கேள்விகள்!!
, புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:49 IST)
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மோடியை எதிர்த்து சில குற்றசாட்டுகளையும் கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.


 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு அன்னா ஹசாரே சில கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டித்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
 
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க லோக்பால் அமைப்பு, விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினார். 
 
அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசு உறுதி அளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. ஆனால், அன்னா ஹாசாரேவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிரைவேற்றப்படவில்லை.
 
பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம்’’ என பாஜக உறுதியளித்தது. 
 
இந்நிலையில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் லோக்பால் அமைப்பையும் மற்றும் சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தாதது ஏன்? என அன்னா ஹசாரே, மோடியை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை; இந்திய வானிலை மையம் எச்சரிக்கை