பாகிஸ்தானியர்களும் பன்றிகளும் உள்ளே நுழைய கூடாது: இந்தூரில் வைக்கப்பட்ட போர்டு..

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (09:41 IST)
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா முழுவதும் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், இந்திய மக்கள் பல்வேறு வகைகளில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் புகழ்பெற்ற உணவுத் தெரு ஒன்று உள்ளது. அந்த தெருவின் நுழைவாயிலில், பாகிஸ்தான் ராணுவ தலைவரின் புகைப்படத்தை பன்றியாக மாற்றி, “பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் இந்த தெருவில் வரக்கூடாது” என எழுதப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தான் மீதான இந்தியர்களின் கோபத்தை இந்த போர்டு வெளிப்படுத்துவதாகவும், “இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என்றும் அந்த தெருவில் உணவகங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
 
மேலும், அந்த பகுதியில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், “ஒரு பயங்கரவாதியை கொன்றால் ஒரு கோடி தரப்படும், 100 பயங்கரவாதிகளை கொன்றால் 100 கோடி தருவேன்” என்றும் கூறியிருப்பது அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments